தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: கொடிவேரி அணையில் போலீசார் குவிப்பு - kodivery dam

கரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு, கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

pol
கரோனா

By

Published : Aug 8, 2021, 4:03 PM IST

ஈரோடு: ஆடி அமாவாசை நாளான இன்று (ஆகஸ்ட்.8) கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆண்டுதோறும் 1000க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா தொற்று பரவ ஆரம்பித்திருப்பதால், அதனை தடுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் கரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு, கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் போலீசார் குவிப்பு

அணை முன்பு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு, அணைக்கு வருவோரை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க:’தற்போதைய நல்ல பெயரை பயன்படுத்தி 100% வெற்றிபெற வேண்டும்’ - கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details