ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(41). இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். மனைவி கோமளவல்லி, மற்றும் இரு குழந்தைகளுடன் புஞ்சைபுளியம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
மாரடைப்பால் தலைமை காவலர் உயிரிழப்பு - police dead
ஈரோடு: தலைமை காவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்
பணி முடிந்து வீடு திரும்பிய சின்ராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியில் சின்ராஜ் உயிரிழந்தார். சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் உடற்கூறு ஆய்வுக்கு பின் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.