கரோனா தொற்று வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பொது சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்துவருகின்றனர்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பல்வேறு துறையில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கரோனா வைரஸ் தொற்று குறித்து வீடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அதில், “பொதுமக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுகிறோம். எனவே அரசின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பதோடு, யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.