தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது - பணிக்கம்பாளையத்தில் கஞ்சா விற்ற இளைஞர்கள்

ஈரோடு: பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ganja
ganja

By

Published : Jan 24, 2020, 2:40 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தடைசெய்யபட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்த சூலி, சேஷகுமார், தேவராஜ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய நான்கு பேரிடம் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, நான்கு பேரும் தலா 75 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது

இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோவை வெள்ளிங்கிரி மலையில் கஞ்சா - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

ABOUT THE AUTHOR

...view details