ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள தென்னந்தோப்பில் பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில், மொடக்குறிச்சி காவல் துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்
ஈரோட்டில் இரவில் சூதாட்டம்: ரூ. 6 லட்சம் பணம், 5 வாகனங்கள் பறிமுதல் - police arrested two people for involved in gambling at erode
ஈரோடு: சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைதான நிலையில், தப்பியோடிய 10-க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
ஈரோடு
அதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட உரிமையாளர் உள்பட இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களிமிருந்து ரூ.6 லட்சம் பணம், டவேரா கார், ஐந்து இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய 10-க்கும் மேற்பட்டோரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:நித்தியானந்தா முன்னாள் சீடர் தூக்கிட்டு தற்கொலை!