தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு! - ஈரோடு மாவட்ட செய்தி

ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்காவில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு வழங்கப்பட்டது.

erode
erode

By

Published : Feb 16, 2021, 6:02 AM IST

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் சிலைகள் உள்ளன. ஆனால் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை இல்லை. எனவே அவரது சிலையை பூங்காவில் வைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

இந்நிலையில், மக்கள் குறைதீர்க்கும் நாளான நேற்று (பிப்.5) ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.

திராவிடர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் சண்முகம் தலைமையில் திராவிடர் பேரவையின் நிறுவன தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் மனு மற்றும் சிலை அமைப்பதற்கான இடத்தின் வரைபடத்தையும் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மனுவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைப்பதாகவும், அவை ஆய்வுக்குட்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தபால் வாக்காளர்கள் பட்டியல் வேண்டும் - கே.என். நேரு மனு!

ABOUT THE AUTHOR

...view details