ஈரோடு வெண்டிபாளையத்தில் ரயில்வே நுழைவு பாலத்தின் கட்டுமான பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சுமார் இரண்டு கிமீ தூரம் வரை சுற்றிவர வேண்டியுள்ளது.
மந்தகதியில் ரயில்வே பாலப்பணி : விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: வெண்டிபாளையத்தில் மந்தகதியில் நடைபெற்றுவரும் ரயில்வே நுழைவு பாலத்தின் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
people-protested-for-railway-bridge-work-finish
இதனிடையே ரயில்வே பாலத்தின் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவது பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறது. இதனால் நுழைவுப் பால பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதிமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!