தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதியில் போராட்டம் - நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜி புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சீமானுக்கு எதிராக மக்கள் போராட்டம்
சீமானுக்கு எதிராக மக்கள் போராட்டம்

By

Published : Feb 18, 2023, 3:34 PM IST

Updated : Feb 18, 2023, 3:44 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்தத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவு கோரி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது "ஒரு சமுதாயத்தைச் சார்ந்த மக்களை குறிப்பிட்டு, அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த வந்தேறிகள்" என்று பேசியதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பில் முடிந்ததுள்ளது. இந்த கலவரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்புதென்னரசு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே திருநகர் காலனி பகுதியில் உள்ள முக்கிய சாலையில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. அப்போது, சீமானை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிப்பில் திமுக, நாதக இடையே மோதல்!

Last Updated : Feb 18, 2023, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details