ஈரோடு: தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மக்கள் காலை நேரத்தில் புத்தாடை உடுத்தி உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது இரவு நேரத்தில் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தும், வாணவெடிகளை விட்டும் தீபாவளியை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நண்பகல் முதலே பட்டாசு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவிகள் அதிக ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் குழுவாக சேர்ந்த ராக்கெட் வடிவிலான வாணவெடியினை வானத்தில் விட்டு கொண்டாடினர்.