தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுடனான கூட்டத்தில் தரையில் அமர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் - வைரலாகும் புகைப்படம்! - DMK Stalin Video Conference

ஈரோடு: கொடுமுடியில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற காணொலி காட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தரையில் அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

panjyat-board-president-sit-on-the-floor-in-stalin-meeting
panjyat-board-president-sit-on-the-floor-in-stalin-meeting

By

Published : Oct 12, 2020, 7:38 PM IST

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள இச்சிபாளையம் ஊராட்சி தலைவராக உள்ளவர் திமுகவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து கலந்து கொண்டுள்ளார்.

இதில் திமுக ஒன்றிய செயலாளர் சின்னசாமி நாற்காலியில் அமர்ந்தும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் ராஜ்குமார் தரையில் அமர்ந்தும் உள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, ''விருப்பத்தின் பேரிலேயே தரையில் அமர்ந்தேன். இதை அரசியல் ஆக்க வேண்டாம். எனக்கு கட்சியில் பதவி கொடுத்தவர்கள் திமுகவினர். இது எனது தனிப்பட்ட முடிவு'' என்று முடித்துக்கொண்டார்.

இதையும் படிங்க:“நடப்பதோ சாமியார் ஆட்சி; குருக்களுக்கு பாதுகாப்பில்லை”- யோகியை தாக்கும் மாயாவதி!

ABOUT THE AUTHOR

...view details