தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டைச் சேர்ந்தவருக்கு கரோனா - கோவையில் சிகிச்சை

ஈரோடு: சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்கவர் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்தவருக்கு பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Erode Corona case
Erode Corona case

By

Published : Jun 7, 2020, 1:46 AM IST

ஈரோடு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் போக்குவரத்து தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விமானம் உள்ளிட்ட அனைத்து வகை போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டு வருவதால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்கவர் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார்.

விமான நிலையத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் அவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக கோயம்புத்தூர் அரசினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details