ஈரோடு:ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் திட்டமலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கோபிசெட்டிபாளையம், நம்பியூர் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், பெருமாநல்லூர், செங்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி முடிந்ததும் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 6 பேர் அந்த வழியாக சென்ற பொலீரோ ஜீப்பில் லிப்ட் கேட்டு கெட்டிசெவியூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீப்பானது தங்கமகாரடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாரல் மழையால் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதையும் படிங்க:"சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்" - மாநகராட்சி ஆணையர்