தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு - மூதாட்டி உயிரிழப்பு

கோட்டுவீராம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி உயிரிழப்பு
மூதாட்டி உயிரிழப்பு

By

Published : Nov 12, 2021, 6:14 PM IST

ஈரோடு:சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சரஸ்வதி (75) நேற்றிரவு (நவ. 11) தொலைக்காட்சி பார்த்துவிட்டு அருகிலிருந்த சுவிட்சை ஆப் செய்யாமல் தூங்கியுள்ளார்.

இதனையடுத்து இன்று (நவ. 12) காலை மூதாட்டி எதிர்பாராதவிதமாக சுவிட்சை தொட்டபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. மனைவியின் அலறல் சத்தம் கேட்டுவந்த குப்புசாமி மின்சார இணைப்பைத் துண்டித்தார்.

சரஸ்வதி வீடு அருகே இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இருப்பினும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இவ்விபத்து நடைபெற்றபோது குப்புசாமி பக்கத்து அறையிலிருந்ததால் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இதில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கனமழைக்கு 3 நபர்கள், 94 கால்நடைகள் உயிரிழப்பு - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்!

ABOUT THE AUTHOR

...view details