ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனுார் வனப்பகுதியில் மூன்று ஒடிசா இளைஞர்கள் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வந்த தகவலின்பேரில் தேடும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், தலமலை வனப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மூன்று பேரை பிடிக்க முயன்றனர். அப்போது அதில் ஒருவர் தப்பியோடியதை அடுத்து, இருவரை பிடித்த சந்தேகத்தின்பேரில் ஆசனுார் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் ரோஹித்தீப்(17), கிஷார்தீப்(40) என்பது தெரியவந்தது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒடிசா இளைஞர்கள்! - Police
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று ஒடிசா இளைஞர்களில் ஒருவர் தப்பியோடியதை அடுத்து இருவரை பிடித்து ஆசனுார் காவல் நிலையத்தில் வனத் துறையினர் ஒப்படைத்தனர்.
odisha-youngster-investigation
மேலும், சத்தியமங்கலத்திலிருந்து மைசூருக்கு செல்ல தவறான பேருந்தில் ஏறியதாகவும், கர்நாடக அரசு பேருந்து நடத்துநர் பாதி வழியிலேயேஅவர்களைஇறக்கிவிட்டதால், வழி தவறி சென்றதாகத் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பிரதிநிதியை அழைத்து வருமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து தப்பியோடிய நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.