சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோடு:2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட போவதாக கூறிய சீமான், இஸ்லாமியர்களை சிறையிலிருந்து பாஜகவின் எதிர்ர்ப்புடன் விடுதலை செய்யும் பட்சத்தில், தங்களது கட்சி திமுகவிற்கு துணையாக நிற்பதோடு தேர்தலில் நிற்காமல் இருந்துவிடுகிறோம் என்றும் திமுகவிற்காக பிரசாரம் செய்யவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்கோபிசெட்டிபாளையத்தில் அக்கட்சியினர் கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று (ஆக.30) தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாடாளுமன்ற தேர்தல் பணிக்களுக்காக எங்களது நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருவதாகவும், தற்போது எங்களது சுற்றுப்பயணமானது 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்ததாக கோவை, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாக கூறினார்.
மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளதாகவும், எந்தப் பொருட்களின் விலையையும் மத்திய அரசால் குறைக்க முடியும் என்றும் கூறிய அவர், தற்போது அரிசி, பருப்பு, எண்ணெய், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், 'மக்கள் நலன் சார்ந்துதான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்; அதேபோல, வளர்ச்சி நோக்கிதான் திட்டங்களும் செல்ல வேண்டும். தற்போது உள்ள இந்த மத்திய அரசை கொடுங்கோன்மை எனத்தான் சொல்ல வேண்டும், தன்னலமற்ற சர்வதிகாரி என சொன்னால் 'பெருந்தலைவர் காமராஜர்' போன்றவர்கள்தான். அவர்கள் மக்களைப் பற்றிதான் சிந்தித்தார்கள். ஆனால், மத்திய அரசோ தேர்தலை நோக்கிதான் நகர்கிறது.
இவர்கள் மக்களை ஏமாற்றுவதே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஏதோ ஒரு தொகுதியில் நின்று தேர்தலை சந்திக்க தயார். என்னைவிட பாஜகவினர் ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா? நாங்கள் 40 இடங்களிலும் போட்டியிட உள்ளோம். யாருடனும் கூட்டணி அமைக்காது; தனித்து போட்டியிட உள்ளோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'பாஜகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை நம்பித்தான் சீட்டு வாங்க முடியும் எத்தனை சீட்டுப் பெற்றாலும் பாஜகவால் ஜெயிக்க முடியாது என்றும் தமிழகத்தில் தனி மனித வருமானம் அதிகரித்து உள்ளது என கூறுவதாகவும், எதற்கு இத்தனை இலவசங்கள் என்றும் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நிலவில் சந்திராயன் -3 விண்கலம் காற்று தண்ணீர் இருக்கின்றதா? என ஆய்வு செய்யும் நிலையில், பூமியில் காற்று தண்ணீர் இருக்கிறதா? என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். நிலவில் சந்திரயான் -3 விண்கலம் இறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பிரதமர் மோடி பெயரிட்டுள்ளதை பற்றி கேட்டதற்கு வேண்டுமென்றால் அங்கு பலகை கூட வைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் கூட கட்டலாம், மதுரையில் ரயில்பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்' என்று சீமான் கூறியுள்ளார்.
திமுகவிற்கு நிபந்தனையின்றி ஆதரவு.. சீமான் வைக்கும் கண்டிஷன் என்ன?:மேலும் பேசிய சீமான், 'இஸ்லாமியர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய துணிச்சலாக திமுக நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தால் நாம் தமிழர் கட்சி திமுகவிற்கு துணையாக இருக்கும் என்றும் இதனை செய்தால், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் தொகுதிகளில் நாதக போட்டியிடாது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'INDIA' கூட்டணியால் காவிரி நீரை பெற்று தமிழகத்திற்கு விடியல் தர இயலுமா? - ஆளுநர் தமிழிசை கேள்வி