ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார், நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா ஆகியோர் பணியாற்றி வந்தனர். 2020 ஜனவரி 1ஆம் தேதியன்று இரவு பணியில் இருந்த இவர்களுக்குகிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, ரவீந்திரகுமார் தறிப்பட்டரையில் இருந்த இரும்பு பைப்பால் நவீன்குமார், சுதேந்திரகுமார் வர்மா ஆகியோரை தாக்கி கொலைசெய்தார். இது தொடர்பாக ரவீந்திரகுமாரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.