ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் பெண்கள் சிலர், தங்கள் குழந்தைகளை ஊசி, விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்ய ஈடுபடுத்துவதாகவும், அவர்களை பிச்சை எடுக்க வைப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் காவல்துறையினர், குழந்தைகள் நல அலுவலர்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் சுற்றிவந்த நரிக்குறவர் பெண்களை அழைத்து எச்சரித்தனர்.
சத்தி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த நரிக்குறவர் குழந்தைகள் - erode district news in tamil
பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த நரிக்குறவர் குழந்தைகளை, பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப அவர்களது பெற்றோர்களிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த நரிக்குறவர் குழந்தைகள்
பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கக் கூடாது என்றும் அவர்களுக்கென தனி பள்ளி அத்தானி ரோடு எம்ஜிஆர் நகரில் செயல்பட்டுவருவதாகவும் அறிவுரை வழங்கினர். மேலும், படிக்கும் வயதில், குழந்தைகளை கண்டிப்பாக பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும் என்று அறிவுறுத்திய காவலர்கள், குழந்தைகளை வியாபாரத்தில் ஈடுபடவைப்பதோ, பிச்சை எடுக்க வைப்பதோ கூடாது என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியிலிருந்து கோபிக்கு காய்கறிகள் கொண்டுவர நடவடிக்கை!