தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே வெளியூர் நபர் கொலை - sathyamangalam police station

ஈரோடு: சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே கோயில் வாசல்படி முன் 30 வயதுள்ள இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம்

By

Published : Feb 21, 2021, 5:16 PM IST


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் வரசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலை ஒட்டி சத்தி காவல் நிலையமும் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று (பிப். 21) காலை கோயில் வழிபாட்டுக்காக பூசாரி கோயில் வாசலை திறந்தபோது, வாசல் முன்பு 30 வயதுள்ள இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த காவல்துறையினர், இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, செங்கல்லால் தலையை தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நபரின் அருகே ரத்த காயங்களுடன் செங்கல்லும், அவர் பயன்படுத்திய துணி உள்ளடங்கிய பையும் கிடந்தது.

இரு தடயங்களை கைப்பற்றிய காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட நபர் யார்? எங்கிருந்து வந்தவர்? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தற்போது கோயில் பிரகார சுவர் கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் நிலையில், கோயில் முன்புறம் எம் சாண்ட் மணல் குவிக்கப்பட்டிருந்தன. கோயில் வாசல் படிக்கும், எம் சாண்ட் மணலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இக்கோயில் முன்பு ஒருவர் கொலை செய்யப்பட்டது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் பழுது காரணமாக அது இயங்கவில்லை. இதனால் காவல்துறையினர் முக்கிய துருப்புச் சீட்டாக கருதும் சிசிடிவி கேமரா பயனளிக்கவில்லை. கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


ABOUT THE AUTHOR

...view details