ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பகுதியில், திமுக சார்பில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட சொல்லியும் கேட்காமல், தான் தோன்றித்தனமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு கரோனா பாதிப்பை மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அணுகாமல் சிறுபிள்ளைத்தனமாக கையாண்டதால்தான் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.