ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் பெய்த மழையால் கொடுமுடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்துக் குளங்கள், குட்டைகள் நிரம்பிவழிந்தன. கொடுமுடியிலுள்ள எஸ்.என்.பி. நகர் வடக்குத்தெரு, கொளத்துப்பாளையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் 30-க்கும் மேற்பட்டோரை அரசு கொடுமுடியிலுள்ள அரசுப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் தங்கவைத்துள்ளது. கனமழையின் காரணமாக பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.