ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் ஜாலி மொபைல் என்னும் கடையை ஜமாலுதீன் என்பவர் நடத்திவருகிறார்.
இந்த கடையில் மூன்று மாதங்களுக்கு முன்பு கடையின் கதவை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜமாலுதீன் மொபைல் கடையில் உயர்விலை கொண்ட ஐ போன்களும் கடையில் வைத்திருந்த பணமும் திருடு போய்யுள்ளது. இது குறித்து ஜமாலுதீன் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
செல்போன் திருட்டு சிசிடிவி காட்சி அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் கிரில் கதவின் கம்பிகளை வெட்டியெடுத்து துளையிட்டு அதன் வழியாக உள்ளே சென்று செல்போன்களை கொள்ளையடித்து மீண்டும் அதேவழியில் தப்பிச்செல்லும் சிசிடிவி படக்காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. அப்படக்காட்சிகளை கொண்டு செல்போன் கடையில் கொள்ளையடித்துசென்ற வடமாநில இளைஞரை தேடிவருகின்றனர்.
மேலும் செல்போன் கடை கொள்ளை குறித்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமாரக்களின் படக்காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
கடையின் உரிமையாளர் இதுகுறித்து பேசும்போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர்தர ஐ போன்களும் கடையில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கமும் திருடு போயுள்ளதாக தெரிவித்தார்.
பரபரப்பாக காணப்படும் நகரின் முக்கிய பகுதியில் நடைப்பெற்ற திருட்டு சம்பவத்தால் இப்பகுதியில் கடை நடத்தி வரும் வணிகர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.