தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு: சோகத்தில் பெற்றோர்கள் - school student death

ஈரோடு: இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16th age student death

By

Published : Aug 24, 2019, 9:23 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மொடாவாண்டி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மகள் கோகுல சிவரஞ்சனி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

கடந்த 21ஆம் தேதி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற சிவரஞ்சனி அன்று மாலை வீடு திரும்பவில்லை.

இறந்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட வீடியோ

இதனால், பதற்றமடைந்த அவரது பெற்றோர்கள் அவர் படிக்கும் பள்ளியில் விசாரித்துள்ளனர். எங்கு தேடியும் தங்களது மகள் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அலிங்கியம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வாய்க்காலில் மிதந்த சடலம் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிவரஞ்சனியா என அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அது சிவரஞ்சனிதான் என பெற்றோரும் உறுதிசெய்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details