ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடத்தூர், கூடக்கரை, நம்பியூர், காவிலிபாளையம், சாவக்காட்டுபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 692 நபர்களுக்கு 27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், குடிநீர் திட்டப் பணிகள், மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
மலையம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அட்டல் டிங்கர் அறிவியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்த பின்னர், அப்பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவிகள் பேப்பர்களைக் கொண்டும் மின்சாதனக்கருவிகளைக் கொண்டும் செல்போன் செயலிமூலம் இயங்கும் மனித உருவிலான ரோபாவின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, மாணவிகளை வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்தியாவிலேயே கல்வித்துறைக்கென அதிகமாக செலவு செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இன்று (டிச.23) மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் நாளை விமானத்தில் செல்லும் வாய்ப்பை உருவாக்கி தருவதே இந்த அரசின் நோக்கமாக உள்ளது.