ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூரில் நடைபெற்ற அரசு விழாவில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் கறவைமாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (ஜன. 12) 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதார துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிகள் செயல்படுத்தும். இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகே மாணவர்களுக்கான தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.