ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 101 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். மேலும், 2020-21ஆம் ஆண்டிற்கான நிதியில் கல்வி விழிப்புணர்வு முகாமையும் தொடங்கிவைத்தனர்.
பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன் விளாங்கோம்பை காற்றாற்று பள்ளத்தை மேம்படுத்த வேண்டுமெனில் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்கப் பயிற்சி ஆன்லைன் மூலம் நடத்த முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க:கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்