பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பத்தாம் வகுப்பு தேர்வில் தனியார் பள்ளிகளின் மதிப்பெண்களில் குளறுபடி ஏற்பட்ட விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர், “ வெறும் 17 மாணவர்கள் மட்டுமே மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ளனர். அவர்கள் மறுமதிப்பீடு செய்துகொண்டு உறுதிப்படுத்தலாம்.
’கல்வி தொலைக்காட்சியில் மேலும் கூடுதலாக வகுப்புகள் தொடங்கப்படும்’ - செங்கோட்டையன் - தண்ணீர் திறப்பு
ஈரோடு: கல்வி தொலைக்காட்சியில் மேலும் கூடுதலாக வகுப்புகள் தொடங்க ஏற்பாடுகள் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
minister sengottaiyan opened bhavanisagar dam water
500க்கு 500 மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளும் கூட இன்னும் இருக்கின்றன. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
கல்வி தொலைக்காட்சியில் மேலும் கூடுதலாக வகுப்புகள் தொடங்க ஏற்பாடுகள் நடைபெறும். அதிமுக ஆட்சியில் மட்டுமே அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.