ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளைத்தில் கடந்த வாரம் பழனிசாமி, மகாளி ஆகிய இருவர் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப்பொருள்கள் உள்பட ஆயிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரித்து சேதமடைந்தன.
இதனால் அந்த இரண்டு குடும்பங்களுக்கும் வேட்டி, சேலை, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருள்களுடன் அரசு சார்பில் ரூ. 4 ஆயிரத்து 500 ரொக்கமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சொந்தப்பணம் ரூ.5 ஆயிரம் என மொத்தமாக ரூ.9 ஆயிரத்து 500 ரொக்கம் தலா இரண்டு குடும்பங்களுக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கிய செங்கோட்டையன் முன்னதாக, கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சென்னியப்பன், மாவட்ட உழவர் விவாதக்குழு தலைவர் நஞ்சப்பன், செயலாளர் வெங்கடாசலபதி, நுகர்வோர் அமைப்பு பெருமாள் கார்த்தி மற்றும் மாணிக்கசுந்தரம் ஆகியோர் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து நம்பியூரில் ரூ.2.54 கோடியிலும் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.2.2 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தற்கு அமைச்சரை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:இயற்கையை நேசிக்கும் விதமாக கொலு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம்!