ஈரோடு:சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 254ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மதிவேந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் பொல்லானின் உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
ரூ.2.60 கோடியில் மணிமண்டபம்:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, 'ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து தீரன் சின்னமலையோடு (Dheeran Chinnamalai) இணைந்து போரிட்டு வெற்றி பெற்ற மாவீரன் பொல்லானுக்கு (Maaveeran Pollan) மரியாதை செய்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.