தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நேற்று (மார்ச் 27) பரிசீலிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அனைத்துக் கட்சியினரும் தொகுதிவாரியாக பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.