ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 375 நெசவாளர்களுக்கு ரூ.18.75 மதிப்பிலான மானியத்தொகையை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு குடும்ப தேவைக்காகன 50 விழுக்காடு தேவைகளை நிறைவேற்றி, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளது.
சாப்பாட்டிற்கு பஞ்சமில்லாத அரசாக செயல்படுகிறது. விவசாய விளைபொருள்களுக்கும் உரிய விலை கிடைத்துவருகிறது. விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது. முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றால் எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டில்லா பயிர் கடன்கள் அதிகளவு வழங்கப்பட்டுவருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால் நல்ல திட்டங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிமுவிற்கு வாக்களிக்கவேண்டும். நாட்டிற்கு தேவையான பசுமை வழி நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் மக்களை தூண்டிவிடுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது.