தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை தொழிலாளர் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது : அமைச்சர் முத்துசாமி

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கத் தொடங்கப்பட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை மத்திய அரசு ஒரு போதும் நிறுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி , குழந்தை தொழிலாளர் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது
குழந்தை தொழிலாளர் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது

By

Published : Dec 2, 2021, 3:52 PM IST

ஈரோடு:தொழிலாளர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் நேற்று (டிச.1) நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 1257 நபர்களுக்கு 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "இணையம் வாயிலாக விண்ணப்பங்கள் செய்வதற்குக் காலதாமதம் ஏற்படுவது விரைவில் சரி செய்யும் வகையில் இ-சேவை மையங்கள் பரவலாக்கப்படும்.

தொடர்ந்து, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்களில் உள்ள 300 குழந்தைகளுக்கு 4 வருடங்களாக உதவித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 மாதம் ஊதியம் வழங்கப்படாதது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

வேறு துறைகளிலிருந்து தற்காலிகமாக நிதி பெற முடியுமா அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்பு நிதி பெற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: விசில் அடித்ததும் பறந்துவரும் வௌவால்கள்; பழங்கொடுத்து பசி தீர்க்கும் புதுச்சேரிக்காரர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details