ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர்பொல்லானின் 218வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, 'பொல்லானுக்கு விரைவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்படும். அரசு மதுக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கியவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மதுபானக் கடையின் நேரத்தை மாற்றும் எண்ணம் இல்லை. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். கடை இல்லாத நேரத்தில் வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. காலையில் மது விற்பனை செய்வது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. டெட்ரா பாக்கெட் குறித்து முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசருக்கு இளைஞர்கள் வந்தால் தகவல் கொடுக்கவும். இளைஞர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த வேன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். 21 வயதிற்குக் கீழே மதுபானக் கடைகளுக்கு வருபவர்களை அன்பாக அழைத்து அறிவுரை வழங்கி, மதுவால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இதையும் படிங்க: காட்டு முயல் வேட்டை: ஒரே இடத்தில் சிக்கிய 107 பேர்.. ஈரோட்டில் நடந்தது என்ன?