ஈரோடு:சித்தோட்டில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆவின் நிறுவனத்திலுள்ள பால் குளிரூட்டும் பகுதி ,பால்கோவா , வெண்ணெய் ,பால்பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் உற்பத்தி செய்வதை அவர் பார்வையிட்டார்.
மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து குறித்தும் , சுகாதார முறையில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது குறித்தும் விற்பனை குறித்தும் பால் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையின் போது கேட்டறிந்தார்.