தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ப.சிதம்பரம் எங்கே இருந்தாலும் ஒன்றுதான்-அமைச்சர் கருப்பணன் - பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

ஈரோடு: ப.சிதம்பரம் வெளியில் இருந்தாலும் சிபிஐ காவலில் இருந்தாலும் ஒன்றுதான் என சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

minister,karuppanan,pchidambaram

By

Published : Aug 24, 2019, 5:32 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சிறப்பு குறைத் தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் குறைதீர்ப்பு முகாமை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ‘ஈரோடு மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த குறைதீர்ப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.

ப.சிதம்பரம் எங்கே இருந்தாலும் ஒன்றுதான்-அமைச்சர் கருப்பணன்

ப.சிதம்பரம் வெளியில் இருந்தாலும் சிபிஐ காவலில் இருந்தாலும் ஒன்றுதான். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடையும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details