தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2020, 2:59 PM IST

ETV Bharat / state

'விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்': செங்கோட்டையன்!

ஈரோடு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுப்பு தெரிவித்து விட்டு தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க செல்வதாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  Minister of School Education KA Shenkotayan  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு  Minister KA Shenkotayan Press Conference  Minister KA Shenkotayan
Minister KA Shenkotayan Press Conference

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நாதிபாளையம், நாகதேவன்பாளையம், சிறுவலூர், மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம்பாளையம் உள்பட 16க்கும் மேற்பட்ட பகுதிகளில் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், அரசு அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள் என பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியளர்களைச் சந்தித்து பேசுகையில், "நிவர் புயல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிகையில் முதலமைச்சர், அரசுத்துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டதால் பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவும் மாணவர்களின் சந்தேங்களை தீர்த்து வைக்கவும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளின் படி, முதலமைச்சர் பரிசீலனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுப்பு தெரிவித்து விட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க செல்வதாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:பள்ளி திறப்பு குறித்து அருகிலுள்ள பள்ளியில் கருத்து தெரிவிக்கலாம்: செங்கோட்டையன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details