தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் மாதிரி' - ஆற்றில் இறங்கிய மருத்துவக் குழு - தொண்டை அடைப்பான்

ஈரோடு: தொண்டை அடைப்பான் நோய்க்குத் தடுப்பூசி போட வனகிராமத்திற்கு செல்ல ஆற்றில் இறங்கி நடந்துசென்ற மருத்துவக் குழுவினரின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

வைரலாகி வரும் புகைப்படம்

By

Published : Aug 1, 2019, 9:44 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் ஆகிய மலைப்பகுதியில் தொண்டை அடைப்பான் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சத்தியமங்கலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நோய் பரவுவதைத் தடுக்க சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பூதிகுப்பை என்ற வனகிராமம் அமைந்துள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தக் கிராமத்திற்கு வனப்பகுதியில் உள்ள மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். பாலம் இல்லாததால் தினமும் இக்கிராம மக்கள் ஆற்றில் இறங்கி நடந்துசெல்வர்.

வைரலாகி வரும் புகைப்படம்

இந்தக் கிராமத்திற்கு தற்போது ராஜன்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சவீதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்றனர். அப்போது மாயாற்றில் இறங்கி பூதிகுப்பை கிராமத்திற்குச் சென்று தடுப்பூசி போடும் பணியை முடித்துவிட்டு மீண்டும் ஆற்றில் இறங்கி நடந்தபடி ஆற்றைக் கடந்துவந்தனர்.

ஆற்றில் இறங்கிய மருத்துவ குழு

தற்போது அந்த மருத்துவக் குழுவினர் இறங்கி நடந்துசென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த மருத்துவக் குழுவினர் எடுத்துவரும் தீவிர முயற்சியினை சுகாதாரத் துறை அலுவலர்களும் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details