உழைப்பாளர்களின் உழைப்பை அங்கீகரித்து பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த முறை தேர்தல் நடைபெற்றதால் மே தின விழா ஈரோட்டில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பாட்டாளி மக்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, மற்றும் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி. ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
ஈரோட்டில் மே தின பேரணி
ஈரோடு : தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினவிழா உற்சாகத்துடன் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது.
மே தின பேரணி - தொழிலாளர்கள் பங்கேற்பு
இந்த பேரணியில் தொழிற்சங்கத்தினர் உட்பட பல சுமைதூக்கும் தொழிற்சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பங்கேற்றனர். ஈரோடு வ.உ.சி மைதானத்தில் தொடங்கி ஈரோடு பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சந்திப்பு என முக்கிய சாலை வழியாக சென்று வ.உ.சி மைதானத்தில் நிறைவு பெற்றது. உழைப்பாளர்களின் மகத்துவத்தையும், ஒற்றுமையைும் எடுத்துரைக்கும் வகையில் பேரணி அமைந்தது.