தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட கட்டுப்பாடுகள் விதிப்பு - வாக்காளர்

ஈரோடு: தேர்தல் பரப்புரையின்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பினை உறுதிசெய்திடவும் பல்வேறு அறிவுரைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

By

Published : Mar 6, 2021, 10:29 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டே வருகிறது. மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களின் நலன்கருதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், தேர்தல் பரப்புரையின்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பினை உறுதிசெய்திடவும் பல்வேறு அறிவுரைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • எனவே, பொதுமக்கள் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் வரும்பொழுது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்,
  • தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்,

நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வருதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் இருத்தல் ஆகியோர் மீது அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனையும் படிங்க: அமித் ஷா வருகை மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்!'

ABOUT THE AUTHOR

...view details