ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகமானது அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடக இடையே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ஓட்டுநர்கள், கர்நாடக பயணிகளால் கரோனா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, மாநில எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடியில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கர்நாடகத்திலிருந்து இ-பாஸ் பெற்ற பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆதார் எண் அடிப்படையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இ-பாஸ், ஆதார் அட்டை இல்லாத பயணிகள் மீண்டும் கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.