ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரக்கன்கோட்டையில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம்தான் குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இக்கோயிலின் பூசாரி பழனிச்சாமி என்பவர் கோயிலின் சுற்றுச்சுவர் கதவை திறந்தபோது ஸ்ரீவைஸ்ணவி, ஸ்ரீவராஹி, ஸ்ரீமகேஸ்வரி ஆகிய மூன்று சாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Man arrested for damaging idols of God in Erode, ஈரோட்டில் சாமி சிலைகளை வீசிச்சென்ற சம்பவம் ஒரு நபர் கைது பின்னர் அவர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் கள்ளயங்காடு பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலை... இன்று திருவள்ளுவர் சிலைக்கே இப்படியா!