தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் அமைத்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. தலைமறைவாகவுள்ள தோட்டத்து உரிமையாளரை வனத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை

By

Published : Dec 19, 2020, 5:27 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஜீரகள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட அருள்வாடி கிராமத்தில் விவசாயி காளய்யா (45) என்பவர் தனது நிலத்தில் ராகி, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.

மின் வேலியில் சிக்கிய யானை:

காட்டு பன்றிகள் பயிரை சேதப்படுத்துவதால் இரவு நேரத்தில் தோட்டத்தில் மின்சார வேலிகள் அமைத்து அதில் மின்சாரத்தை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (டிச.18) வனப்பகுதியிலிருந்து வந்த ஆண் யானை ஒன்று அந்த மின் வேலியயில் சிக்கி உயிரிழந்தது.

பின்னர், இன்று (டிச.19) காலை தோட்டத்தில் யானை உயிரிழந்துகிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஜீரகள்ளி வனச்சரகர் முத்துவிற்குத் தகவல் தெரிவித்தனர்.

தலைமறைவான தோட்டத்து உரிமையாளர்:

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் யானையை மீட்டு உடற்கூராய்வு செய்தனர். ஆய்வில் உயிரிழந்த யானைக்கு ஏழு வயது இருக்கலாம் என்றும் மின்வேலியில் சிக்கியதால்தான் உயிரிழந்துள்ளது என்பதும் உறுதியானது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தோட்டத்து உரிமையாளர் காளய்யா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து, அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காலில் காயத்துடன் அவதிப்பட்ட யானை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details