ஈரோடு:பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் கரைகள் உடைந்ததால், நீர் விளைநிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனத்திற்கு நீர் பெற்று வருகிறது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் துறை சார்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வலையில், ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கீழ்பவானி கால்வாயில் மழை நீர் நிரம்பியது. அதில், கால்வாயின் இரண்டு கரைகளும் உடைந்து, விளைநிலங்களில் நீர் புகுந்தது. இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.