ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 31ஆம் தேதி இரவு காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெருந்துறை காவல் துறையினர், இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை - Lovers commits suicide on Chipchat campus in erode
ஈரோடு: பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அடையாளம் தெரியாத காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Lovers commits suicide
அதன்பின், காதலர்கள் வந்த இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் சோதனை செய்தபோது, தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் பெயர் சுகன்யா என்பது தெரியவந்தது. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.