ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி - மாதம்பாளையம் சாலையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜியாவுல்லா, மறைமலை அடிகள் வீதியை சேர்ந்த முகமது யூசுப் என்பது தெரிய வந்தது.
இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்க முயன்ற மாரியப்பன் என்பவரை சத்தியமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.