கோவையிலிருந்து அட்டைகளை ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று பவானிசாகர் பகுதியில் உள்ள காகித ஆலைக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி வந்தபோது கணக்கம்பாளையத்தில் உள்ள சாலை வளைவில் அதிவேமாக திரும்பியது.
இந்நிலையில் விவசாயி பழனிசாமி ஒருவர் மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை இயக்கமுற்பட்டபோது அதிவேகமாக திரும்பிய லாரி பாரம் தாங்காமல் சாலையோரம் இருந்த அவர் மீது கவிழ்ந்தது.
இதில் பழனிசாமி கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜேசிபி உதவியுடன் லாரியை நகர்த்தி பழனிசாமியை மீட்டனர். பின் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஒட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் தப்பியோடிய லாரி ஒட்டுநரை தேடிவருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கிறது.