தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு: சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானை

By

Published : Jan 6, 2021, 11:31 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.

குறிப்பாக யானைகள் அதிகமாக வசிக்கும் ஆசனூர் வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும், சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானை

கடந்த சில நாள்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று ஆசனூர் அருகே சத்தியமங்கலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடமாடி வருகிறது.

இந்த யானையானது சாலையில் செல்லும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல், சாலையோரம் நகராமல் நிற்பதால், அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக வாகனத்தை இயக்குமாறு வாகன ஓட்டிகளிடம் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகள்: பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details