தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் தத்தளித்த பெண் பத்திரமாக மீட்பு - well rescued

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே 90அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் இறங்கிவிட்டு, ஏற முடியாமல் தவித்த பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பெண் மீட்பு

By

Published : Jun 6, 2019, 9:57 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே சில்லாமடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த அமராவதி என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று அதேபகுதியில் உள்ள வறண்ட கிணற்றில் இறங்கி மேலே ஏற முயற்சி செய்தபோது அவரால் முடியவில்லை.

இதைப்பார்த்த கிராமவாசிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கயிறு மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். மேலும் பள்ளி அருகே இந்த கிணறு உள்ளதால், மூடுவதற்கு அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். படிகட்டுகள் இல்லாத மொட்டை கிணற்றில் பெண் இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி அருகே வறண்ட கிணற்றில் தவித்த பெண் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details