ஈரோடு: திருவண்ணாமலை மாவட்டம், மேல்செட்டிபட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது 17 வயது மகள், தன் தாயார், பாட்டி ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
இவர் கோபி அருகே அரசூரில் உள்ள தனியார் மில்லில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
18 வயது பூர்த்தியடையாத இளம் பெண்
இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மெக்கானிக் வேலை செய்து வரும் அண்ணாமலை என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமி என்பதால், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள், தண்டராம்பட்டு காவல் துறையினர் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பாதுகாப்பு மையத்தில் இருந்து அப்பெண்ணை அவரது பாட்டி அழைத்து வந்து, திருமணத்திற்கு முன் வேலை செய்த மில்லிற்கு மீண்டும் வேலைக்கு அனுப்பி வைத்தார்.
காரில் சிறுமி கடத்தல்
இதையடுத்து, நேற்றிரவு அப்பெண்ணை அவரது கணவர் அண்ணாமலை, அவரது பாட்டி, உறவினர்களுடன் மில்லுக்குச் சென்று திருமண போட்டோவை காண்பித்து தங்களுடன் அனுப்பிவைக்குமாறு கோரியுள்ளனர்.