தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் கேரள பலாப்பழங்கள் விற்பனை அமோகம்!

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டிருந்த கேரள பலாப்பழங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை  கேரளா பலாப்பழம்  பலாப்பழம்  வாரச்சந்தையில் கேரளா பலாப்பழங்கள் விற்பனை அமோகம்  Punchaipuliyampatti Weekly Market  Kerala jackfruit  Kerala jackfruits on sale at Punchaipuliyampatti weekly market  jackfruit
Kerala jackfruits on sale at Punchaipuliyampatti weekly market

By

Published : Apr 16, 2021, 6:39 AM IST

ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை பலாப்பழம் சீசன். இந்த சீசன் நேரத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருதளமன்னார், பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை, கோயம்புத்தூர், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் பலாப்பழங்கள் குவித்துவைத்து விற்கப்படுகின்றன.

கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், தமிழ்நாட்டில் பலாப்பழ விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது சீசனை முன்னிட்டு கேரளாவிலிருந்து பலாப்பழங்கள் வந்து குவிந்துள்ளன. இந்த ஆண்டு பலா நல்ல விளைச்சல் இருந்ததால் விலை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. இதனால், விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பெரிய பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.200 வரையும், சிறியது ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற்கப்படுகிறது. கேரளா மாநிலத்திலிருந்து அதிகளவில் பலாப்பழம் வருகிறது.

கடந்த ஆண்டு பெரிய பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்றது. கடந்த ஆண்டு சீசனைவிட விலை குறைவாக உள்ளதால் வியாபாரம் அதிகரித்துள்ளது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பருவ மழையால் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details