கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மோசடி வழக்கில் தொடர்புடைய 6 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று சத்தியமங்கலம் வனத்துறை தொடரப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 1,445 ரூபாய், கோபி காவல் நிலைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 1,450 ரூபாய் மற்றும் பங்களாபுதூர் காவல் நிலைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 360 ரூபாய் என மொத்தம் 3,255 ரூபாய் தொகையாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகை மற்றும் பணம் இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு எடுத்து வரப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வழக்கு தொடர்பான நகை மற்றும் பணம் எடுக்கப்பட்டு மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று(ஜூன் 7) இரும்பு பெட்டி சார்நிலை கருவூலத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இரும்பு பெட்டியை திறந்து நகையை எடுக்க மாஜிஸ்திரேட் முயன்ற போது, இரும்பு பெட்டியின் பூட்டிற்கு போடப்பட்ட சீல் உடைக்கப்பட்டாமல் இருந்தது. ஆனால் பூட்டப்படும் இரும்பு கொக்கி உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.